Settings

முகப்பு/செய்திகள்/எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்
செய்திகள்

எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்

🕒 24 நவ., 2026, 05:56 AM
⏱️ 3 நிமிடம் வாசிப்பு
எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சி. அருண் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ள சம்பவம் தமிழக அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை பிற்பகல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்தப் புகார் மனு நேரடியாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது மாவட்ட ஆட்சியரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகவும் (Inappropriate advances), தேவையற்ற மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை (Unwarranted messages) அனுப்பியதாகவும் எம்.எல்.ஏ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (Tamil Nadu Prohibition of Harassment of Women Act) கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் இதற்கிடையில், இதே விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு ஒரு குற்றவியல் ரிட் மனு (Writ Petition - Criminal) விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஆர். திரிசூலி என்பவர் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், "மாவட்ட ஆட்சியரின் முகா (Bungalow) மதுபோதையில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டியதாகவும், பெண் அதிகாரிக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் எம்.எல்.ஏ மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். நீதிமன்றத்தில் வழக்கின் மீதான வாதங்கள் : விசாரணையின் போது ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் (State Public Prosecutor) ஆர். ஜான் சத்யன், "தலைமைச் செயலாளர் எம். சாய் குமாரோ அல்லது காவல்துறையினரோ சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியிடமிருந்து எந்தவொரு புகாரையோ அல்லது முறையீட்டையோ பெறவில்லை" என நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். காவல்துறைக்கோ அல்லது தலைமைச் செயலாளருக்கோ புகார் ஏதேனும் வந்ததா என நீதிபதி வி. லட்சுமிநாராயணன் எழுப்பிய கேள்விக்கு, அரசு வழக்கறிஞர் "இல்லை" (No) என அழுத்தமாகப் பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து உரிய விளக்கத்தைப் பெற்று (Instructions) செவ்வாய்க்கிழமைக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார் வழக்கின் விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ். ஜெயக்குமார் மற்றும் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது: பெண் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் தகவல் மனுதாரருக்கு எப்படித் தெரியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் ஜெயக்குமார், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறினார். அந்தப் புகார் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி கேட்டபோது, "அது என்னிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்" என்று கூறிய வழக்கறிஞர், அரசு அதிகாரிகள் உண்மையை மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். அனைத்து ஆதாரங்களும் அவர்களிடம் உள்ளன; ஆனால் அனைத்தையும் மறைத்துவிட்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். இந்தச் சூழலில் அந்தப் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ன செய்வார்?" என மனுதாரர் வழக்கறிஞர் வாதிட்டார். இதைக் கேட்டு வியப்படைந்த நீதிபதி, "ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குத் தன்னைத் தானே எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று தெரியாது என்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், 2021-ஆம் ஆண்டில் அப்போதைய சிறப்பு டி.ஜி.பி-க்கு எதிராகப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரை நினைவுகூர்ந்த நீதிபதி, "கடந்த முறை இதுபோன்ற சம்பவம் நடந்தபோது, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே முன்வந்து புகார் அளித்தார். தற்போதைய விவகாரத்தில் அந்தப் புகார் எங்கே? ஒரு மாவட்டத்தின் தலைவராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குத் தெரியாத ஒன்றை நீங்களும் நானும் செய்யப் போகிறோமா?" எனக் காட்டமாகக் கேட்டார். மேலும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் (NCW) இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து (Suo motu) விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, டி.ஜி.பி-யிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நீதிபதி லட்சுமிநாராயணன், "செய்தித்தாள் அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியும்; ஆனால் என்னால் முடியாது. எம்.எல்.ஏ ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்பதற்கான உறுதியான ஆதாரத்தை (Tangible material) என்னிடம் தாருங்கள்; நான் உடனடியாக உத்தரவு (Writ of Mandamus) பிறப்பிக்கிறேன்" என்றார். மேலும், மனுதாரர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது போல் தெரிகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதி, "சம்பந்தப்பட்ட அதிகாரியே எந்தப் புகாரும் அளிக்காத நிலையில், காவல்துறை நடவடிக்கை எடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. செய்தித்தாள் அறிக்கைகளின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் அளிக்காத பட்சத்தில் நான் இதில் தலையிட மாட்டேன்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். நீதிமன்றத்தில் இவ்வாறு வாதங்கள் நடைபெற்ற நிலையிலேயே,நேற்றைய தினம் திங்கள்கிழமை பிற்பகல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரடியாக எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கில நாழிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார் மேலும் “ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி இன்று வெளியாகியிருக்கிறது; இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவை கைது செய்து விசாரிக்க வேண்டும்” -என மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
நியாயவிலைக் கடை பணியிடங்கள் நிரப்புவதில் சர்ச்சை: கரூரில் கொதிக்கும் பணியாளர்கள்!செய்திகள்

நியாயவிலைக் கடை பணியிடங்கள் நிரப்புவதில் சர்ச்சை: கரூரில் கொதிக்கும் பணியாளர்கள்!

Anandakumar🕒 நவ. 23
விவசாயிகளின் கண்ணீர்: காட்டுப்பன்றிகளால் நாசமான மக்காச்சோளப் பயிர்கள்!செய்திகள்

விவசாயிகளின் கண்ணீர்: காட்டுப்பன்றிகளால் நாசமான மக்காச்சோளப் பயிர்கள்!

VASANTHA🕒 நவ. 23
பக்தர்களே கவனத்திற்கு! நாளை காலை வரை 144 தடை உத்தரவு!செய்திகள்

பக்தர்களே கவனத்திற்கு! நாளை காலை வரை 144 தடை உத்தரவு!

Vijay🕒 நவ. 23
பழனி கோவிலில் குவிந்த போலீஸ் படை! கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு தீவிரம்செய்திகள்

பழனி கோவிலில் குவிந்த போலீஸ் படை! கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு தீவிரம்

VASANTHA🕒 நவ. 23
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

Srinivasan🕒 நவ. 24
கார்த்திகை முதல் சோமவாரம்: தில்லையாடி கோயிலில் கோலாகலமாக நடந்த சங்காபிஷேகம்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சோமவாரம்: தில்லையாடி கோயிலில் கோலாகலமாக நடந்த சங்காபிஷேகம்

SASHVI🕒 நவ. 23
பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக்கிய இளைஞர்கள்: அதிரடி கைது!செய்திகள்

பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக்கிய இளைஞர்கள்: அதிரடி கைது!

VASANTHA🕒 நவ. 23
வள்ளலார் கோயிலில் 108 சங்குகளால் அபிஷேகம் - பரவசத்தில் பக்தர்கள்!செய்திகள்

வள்ளலார் கோயிலில் 108 சங்குகளால் அபிஷேகம் - பரவசத்தில் பக்தர்கள்!

SASHVI🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔