திண்டுக்கல் மாவட்டம், வீரலப்பட்டியில் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களை, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி (சச்சிதானந்தம்) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகள் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எம்.பி.-யிடம் வேதனை தெரிவித்தனர். பல ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோளப் பயிர்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளதால், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த எம்.பி., இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் உடனடியாகப் பேசி, உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பயிர்கள் முற்றிலும் சேதமடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.









