சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது.
செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது.

🕒 17 செப்., 2026, 05:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது.

AI Highlights

  • திண்டுக்கல் பழனி சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் அரிவாளுடன் சென்றதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபடி கையில் அரிவாளை சுழற்றிக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்–பழனி சாலையில் முத்தனம்பட்டி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபடி, கையில் அரிவாளை வைத்துக்கொண்டு சுழற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில், சார்பு ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில் மாங்கரையைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கோகுல்குமார் (24), முருகன் மகன் துளசி (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைரலான வீடியோ அடிப்படையில் போலீசார் நடவடிக்கை; இருசக்கர வாகனம் பறிமுதல்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔