சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என சட்டப்பேரவையில் பேசிய தவெக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன்
செய்திகள்

தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என சட்டப்பேரவையில் பேசிய தவெக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன்

🕒 20 ஆக., 2026, 04:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என சட்டப்பேரவையில்  பேசிய தவெக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் நேற்று சட்டப்பேரவையில் கலந்து கொண்டு பேசிய போது தனக்கு வேலையும் இல்லை, காரும் இல்லை இதனால் காதல் தோல்வி அடைந்ததாக தெரிவித்திருந்தார், இவரின் பேச்சு சட்டப்பேரவையில் அனைவரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது. கார் இல்லாததால் தேனியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்து ஆட்டோவில் தான் தலைமைச் செயலகத்திற்கு வருவேன் எனவும் தெரிவித்திருந்தார். இவரது பேச்சு அனைவரது கவனத்தை ஈர்த்த நிலையில், இவருக்கு ஏற்கனவே சொந்தமாக கார் இருக்கும் தகவல் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தொகுதிக்குள் "எம்எல்ஏ" என்ற போர்டு பொருத்திய காருடன் வலம் வரும் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் அதனை ரீல்சாக எடுத்து தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அவரே தன்னிடம் கார் இல்லை என சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறாக பேசியது அம்பலமாகி உள்ளது. மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட தனது பிரமாண பத்திரத்தில் தனக்கு சொந்தமாக 2023 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், இரண்டு பைக்குகள், உள்ளிட்ட 72 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பீடு காட்டியுள்ளார். அப்படி இருக்கையில் தன்னிடம் கார் இல்லை என சட்டப்பேரவையில் உண்மைக்கு புறம்பாக எம்எல்ஏ பேசியது தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவரின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது வாகனம் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள வாகனத்திற்காக காப்பீடு ஐந்து மாதங்களுக்கு முன்பே முடந்துள்ளதும் அம்பலமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சபரி ஐங்கரன் வேட்பு மனுவில் போது தாக்கல் செய்ய பிரமாணம் பத்திரத்தில் தனக்கு சொந்தமாக கார் உள்ளதாக இருக்கும் தகவல்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔