கன்னியாகுமரி மாவட்டம் திறப்பரப்பு அருகே கோதை ஆற்றில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருப்பதை அந்த பகுதியில் மக்கள் சிலர் பார்த்தனர் அந்த முதலயை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் சென்னையில் இருந்து சிறப்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டனர் ஆனாலும் முதலை பிடிப்படாமல் இதுவரை போக்கு காட்டியது இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்தனர் இந்த நிலையில் நேற்று ஆற்றுப்பாலம் அருகே கட்டப்பட்டிருந்த வலையில் அந்த முதலை சிக்கியது எனவே அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் கோதையாறில் பிடிபட்ட அந்த முதலையை மருத்துவ பரிசோதனைக்கு பின் வனத்துறையினர் பாதுகாப்புடன் நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே காரையாறு அணையில் விட்டனர் மாவட்ட வன அலுவலர் இளங்கோ அறிவுறுத்தலின் பேரில் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட வனத்துறை இணைந்து முதலையை பாதுகாப்பாக அணையில் விட்டனர் இந்த வீடியோ காட்சிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் முதலை அணையின் நிலப்பரப்பிலிருந்து தண்ணீரை நோக்கி ஓடுவது போன்ற காட்சிகள் உள்ளது. ஏற்கனவே பிற மாவட்டங்களில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிக் கொம்பன், புல்லட் ராஜா ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று யானைகள் கொண்டு வந்து விடப்பட்டன தற்போது யானைகளை தொடர்ந்து முதலையும் நெல்லை வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டுள்ளதால் மக்களை அச்சுறுத்தும் வனவிலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மாவட்டமாக நெல்லை மாறியுள்ளது மேலும் ஏற்கனவே காரையார் அணையில் முதலை இருந்து வருகிறது அணையின் மேல் பகுதியில் உள்ள காணி பழங்குடி மக்கள் சில நேரங்களில் இந்த அணையை கடந்து தான் காரையாறு பகுதிக்கு வருகின்றனர் ஏற்கனவே அணையில் முதலை இருப்பது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது கூடுதலாக முதலை விடப்பட்டிருப்பது காணி பழங்குடி மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
கன்னியாகுமரியில் பிடிபட்ட முதலை நெல்லை காரையாறு அணையில் விடுவிப்பு
🕒 22 செப்., 2026, 06:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பகுதியில் பிடிபட்ட முதலை, வனத்துறையினரால் பாதுகாப்பாக நெல்லை மாவட்டம் காரையாறு அணைப் பகுதியில் விடப்பட்டது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
