சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

🕒 5 அக்., 2026, 11:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
✨

AI Highlights

  • •அரியலூர் மாவட்டத்தில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி 10ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி 10ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கில், பட்டதாரி வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவிக்கும், பட்டதாரியான வில்வேந்திரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. அப்போது, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வாலிபர் வில்வேந்திரன் அந்த சிறுமியுடன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.

இதற்கிடையே மாணவி கர்ப்பமடைந்ததை அறிந்த வில்வேந்திரன், திருமணம் செய்ய மறுத்ததுடன், அந்த கர்ப்பத்தை சட்டவிரோதமாகக் கலைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி வில்வேந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 50,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔