சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம் – 30% சிறப்புத் தள்ளுபடி
செய்திகள்

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம் – 30% சிறப்புத் தள்ளுபடி

🕒 19 செப்., 2026, 04:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம் – 30% சிறப்புத் தள்ளுபடி

AI Highlights

  • திருநெல்வேலியில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம் – 30% சிறப்புத் தள்ளுபடி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி ஜங்ஷன் ராஜா பில்டிங் பகுதியில், பெரியார் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியது. இதன் தொடக்க விழா மாலை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் குத்துவிளக்கேற்றி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பல்வேறு ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்து, இந்தியா முழுவதும் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், திருப்புவனம் பட்டு சேலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புடவைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் உள்ளிட்ட ஏராளமான கைத்தறி பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் வழங்கப்படும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔