தமிழக முதலமைச்சர் விஜய், தனது லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை காலை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாகவும் அவர் ஆலோசனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் பயணத்தின்போது தமிழகத்தில் முதலீடு செய்ய இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். அவரது பயணத்தின் ஒரு பகுதியாக முதலீட்டு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், லண்டன் பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாளை காலை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

