சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/சிவகாசியில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் விழிப்புணர்வு முகாம் தொடக்கம்!
செய்திகள்

சிவகாசியில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் விழிப்புணர்வு முகாம் தொடக்கம்!

🕒 19 ஆக., 2026, 07:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சிவகாசியில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் விழிப்புணர்வு முகாம் தொடக்கம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பல்வேறு மத்திய அரசின் திட்டங்களில் பயனாளிகள் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் துவங்கி நடைபெற்று வருகிறது. மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். இந்த முகாமில் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து மக்கள் நல திட்டங்கள் குறித்தும், அதன் பயன்கள், திட்டங்களை பயன்பெறும் வழிமுறைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் மருத்துவக் காப்பீடு & விபத்து காப்பீடு பதிவு, ஆதார் அட்டை விவரங்கள் திருத்தம், பட்டாசு, தீப்பெட்டி மற்றும் பிரிண்டிங் தொழிலாளர்களை தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வது, குழந்தைகளுக்கான கல்வி, திருமண உதவித்தொகை, ரூ.5 லட்சத்துக்கான இலவச மருத்துவ காப்பீடு அட்டை பதிவு, இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சிக்கான விண்ணப்ப பதிவு, தொழிலாளர் அடையாள அட்டையுடன் ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு பதிவு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ரூ.3 ஆயிரம் பென்ஷன் திட்ட பதிவு மையம் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔