அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துளாரங்குறிச்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் வைத்தி கலந்து கொண்டு, மது இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் பசுமை தாயகம் தலைவர் மற்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான சௌமியா அன்புமணி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, கிராம மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் வைத்தி பெற்றுக்கொண்டார். அப்போது துளாரங்குறிச்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாயவிலைக் கடைக்கு சொந்தக் கட்டிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் வைத்தி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக உடனடியாக அறிவித்தார். தங்களது கோரிக்கையை உடனடியாக ஏற்று நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்திகள்
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கிய பாமக எம்.எல்.ஏ. வைத்தி!
🕒 3 அக்., 2026, 05:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி துளாரங்குறிச்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் வைத்தி கலந்து கொண்டார். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், துளாரங்குறிச்சியில் நியாயவிலைக் கடைக்கு சொந்தக் கட்டிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
