சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/காருக்குள் பதுங்கியிருந்த மரநாய் குட்டி – சுற்றுலா பயணிகள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
செய்திகள்

காருக்குள் பதுங்கியிருந்த மரநாய் குட்டி – சுற்றுலா பயணிகள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

🕒 29 செப்., 2026, 06:13 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காருக்குள் பதுங்கியிருந்த மரநாய் குட்டி – சுற்றுலா பயணிகள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து குற்றாலத்திற்கு சென்ற பயணிகளின் காரில் பதுங்கியிருந்த மரநாயை தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்த சிவகாசியை சேர்ந்த சுற்றுலா பயணிகள்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சிவகாசியில் இருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு வாடகை காரில் வீடு திரும்பிய குடும்பத்தினர், காரின் பின்பகுதியில் காயமடைந்த நிலையில் பதுங்கியிருந்த மரநாய் குட்டியை மீட்டு தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியைச் சேர்ந்த இசக்கிராஜா தனது குடும்பத்தினருடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா முடிந்து வாடகை காரில் சிவகாசிக்கு திரும்பியுள்ளனர்.

வீட்டிற்கு வந்த பின்னர் காரின் பின்பகுதியில் வைத்திருந்த துணிப்பை உள்ளிட்ட பொருட்களை எடுத்தபோது, அங்கு மரநாய் குட்டி ஒன்று இருப்பதை குடும்பத்தினர் கவனித்தனர்.

காருக்குள் இருந்த மரநாய் குட்டியின் காலில் காயம் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அதனை பத்திரமாக மீட்டு சிவகாசி தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் தீயணைப்புத் துறையினர் மரநாய் குட்டியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் மரநாய் குட்டியை கால்நடை மருத்துவர்களிடம் கொண்டு சென்று, அதன் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காயம் குணமடைந்ததும், மரநாய் குட்டியை உரிய வனப்பகுதியில் மீண்டும் விட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா சென்றபோது தங்களது காருக்குள் எதிர்பாராத விதமாக புகுந்திருந்த வனவிலங்கை பாதுகாப்பாக மீட்டு, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்த சிவகாசி குடும்பத்தினரின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔