சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு? – மீண்டும் முதலியார்பட்டி மக்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா
செய்திகள்

மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு? – மீண்டும் முதலியார்பட்டி மக்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா

🕒 29 செப்., 2026, 06:57 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு? – மீண்டும் முதலியார்பட்டி மக்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா
✨

AI Highlights

  • •நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மின்வெட்டு பிரச்னை தொடர்பாக முதலியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா மீண்டும் மக்களை சந்தித்து மின்விநியோகம் குறித்து கேட்டறிந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அம்பாசமுத்திரம் அருகே மின்வெட்டு பிரச்னை தொடர்பாக பொதுமக்களை மீண்டும் நேரில் சந்தித்து, மின்சார விநியோகம் சீராக உள்ளதா என முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா கேட்டறிந்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, அகஸ்தியர்புரம், தெற்கு அகஸ்தியர்புரம், வடமலைசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மின்வெட்டு நிலவியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி பொதுமக்கள் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அங்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததாகவும், மின்வாரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மின்விநியோகம் சீராக உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இசக்கி சுப்பையா மீண்டும் முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார். அங்கு பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், “மீண்டும் மின்தடை ஏற்படுகிறதா? மின்சாரம் சீராக வழங்கப்படுகிறதா?” என கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு பொதுமக்கள், தன்னிடம் பேசிய பின்னர் இதுவரை மின்தடை ஏற்படவில்லை என்றும், மின்சாரம் சீராக வழங்கப்படுவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தங்களது பிரச்னையை நேரில் கேட்டறிந்து அதிகாரிகளிடம் பேசியதற்காக இசக்கி சுப்பையாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

“எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்”

அப்போது சில பொதுமக்கள், “நீங்கள்தான் எங்கள் ஊர் எம்.எல்.ஏ.; எந்த சூழ்நிலையிலும் உங்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என தெரிவித்ததாகவும், கடந்த போராட்டத்தின்போது சிலர் பேசிய வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் சென்ற பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், மின்விநியோகம் மட்டுமின்றி அப்பகுதியில் நிலவும் பிற அடிப்படை பிரச்னைகள் குறித்தும் அவரிடம் தெரிவித்தனர். கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி மின்வெட்டை கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு மின்விநியோகம் சீராக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீண்டும் நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்த இசக்கி சுப்பையாவுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔