சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்
செய்திகள்

உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்

🕒 19 செப்., 2026, 04:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்

AI Highlights

  • நெல்லை வண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குருபாக்கியம் தலைமை தாங்கினார். இதில் திரளான வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், டி.சி.எஸ். பணியில் நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசாணை எண் 15-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும், பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கு தொடர்பில்லாத கிடங்கு மேலாளர் கூடுதல் பொறுப்புகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு உயிர் உரங்களை 100 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய மாவட்டச் செயலாளர் குருபாக்கியம், தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔