விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் திடீர் ஆய்வு... அங்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உண்மையாக சேவையாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் ... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார் .இந்த நிலையில் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் அங்கு அதிகாரிகள் எத்தனை மணிக்கு வருகிறார் என்பது குறித்து ஆய்வு செய்து வருகை பதிவேட்டை பார்வையிட்டார். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டிருந்த அவர் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார. மேலும் சர்வே அறைக்குச் சட்டமன்ற உறுப்பினர் சென்றபோது அங்கு ஒருவர் தனது இடத்தை அளிக்க அதிகாரிகள் வரவில்லை என்று சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.இதனால் அதிகாரிக்கும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதுஇதனை எடுத்து சமாதானம் செய்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் அதிகாரிகளை இந்த ஒரு முறை அளந்து கொடுக்குமாறும் அளிக்கும் பொழுது தானே சம்பவ இடத்திற்கு வருவதாகவும் தெரிவித்தார்
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் திடீர் ஆய்வு... அங்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உண்மையாக சேவையாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் ...
The News Outlook
🕒 6 ஜூலை, 2026, 01:33 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
