விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பேருந்துக்காக கோயில் வாசலில் அமர்ந்து காத்திருந்த மூதாட்டி மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் மூதாட்டி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்த அய்யாச்சாமி என்பவரது மனைவி பாப்பம்மாள் (70). கணவர் சில வருடங்களுக்கு முன்னதாக காலமாகி விடவே பாப்பம்மாள் விவசாய வேலைக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து கிளம்பி பேருந்துக்காக காத்திருந்தார். சாலையோரம் இருந்த பிள்ளையார் கோயில் வாசல் முன் அமர்ந்திருந்த மூதாட்டி மீது சிவகிரியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த பால்வாகனம் படு வேகத்துடன் மோதியுள்ளது. இதில் தலை கால் உள்ளிட்ட பல்வேறு பாகங்களில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து வந்த தளவாய்புரம் போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டெம்போ ஓட்டுநர் மதுரை மாவட்டம் எம். சுப்புலாபுரத்தைச் சேர்ந்த ஜோஸ்வா என்பவரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் நடந்த இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பேருந்துக்காக கோயில் வாசலில் அமர்ந்து காத்திருந்த மூதாட்டி மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் மூதாட்டி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.
The News Outlook
🕒 10 ஜூலை, 2026, 05:17 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
