நெல்லை மாவட்டம் மேலஇலந்தக்குளத்தைச் சேர்ந்தவர் மதபோதகர் ஆப்பிரகாம். இவர் தேவர்குளம் பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி வந்துள்ளார். இந்த சபைக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரார்த்தனைக்காக வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு சபைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் வந்தது. இதையடுத்து, பிரார்த்தனைக்காக வரும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மதபோதகர் ஆபிரகாம் மீது தேவர்குளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படும் நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம், மொத்தம் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசிற்கு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு விவரங்களை கேட்டதும் நீதிமன்ற அறையிலேயே ஆபிரகாம் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: மதபோதகருக்கு மரண தண்டனை
🕒 20 ஆக., 2026, 07:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

