ராஜபாளையத்தில் நடைபெற்ற தென் தமிழக அளவிலான கபடி போட்டியில் 96 அணிகளைச் சேர்ந்த 1,152 பேர் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு தென் தமிழக அளவிலான ஆடவர் கபடி போட்டி 33 வது ஆண்டாக நடைபெற்றது. பகல் மற்றும் மின்னொளியில் நடைபெற்ற இந்த போட்டிகளில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கோவை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 96 அணிகளைச் சேர்ந்த 1,152 பேர் கலந்து கொண்டனர். 58 கிலோவுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் 50 அணியினரும், அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளும் ஓப்பன் டோர்னமெண்ட்டில் 46 அணியினரும் கலந்து கொண்டனர். மூன்று ஆட்டகளங்களில் முழுவதும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். ஓபன் டோனமண்ட் 44 சுற்றுகளாகவும், 58 எடை பிரிவு 49 சுற்றுக்களாகவும் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களை பிடித்த 16 அணியினருக்கு ரூபாய் 90 ஆயிரம் ரொக்க பரிசும், நிரந்தரக் கோப்பையும் வழங்கப்பட்டது.
செய்திகள்
ராஜபாளையத்தில் நடைபெற்ற தென் தமிழக அளவிலான கபடி போட்டியில் 96 அணிகளைச் சேர்ந்த 1,152 பேர் கலந்து கொண்டனர்.
🕒 20 ஜூலை, 2026, 01:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

