இந்திய ரெயில்வேயில் காலியாக உள்ள துணை மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 590 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதில் நர்சிங் சூப்ரென்டன்ட் – 365, பார்மசிஸ்ட் – 118, மலேரியா இன்ஸ்பெக்டர் – 43, லேப் அசிஸ்டென்ட் – 31, எக்ஸ்-ரே டெக்னீசியன் – 25, இ.சி.ஜி. டெக்னீசியன் – 4 உள்ளிட்ட பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 590 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி
ஒவ்வொரு பணிக்கும் ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். நர்சிங் பணியிடங்களுக்கு இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் நர்சிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். டி.ஜி.என்.எம்., பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட தகுதிகள் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பார்மசிஸ்ட் பணிக்கு பார்மசி பிரிவில் உரிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடங்களுக்கு ஏற்ப அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படலாம்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். தேர்வில் பங்கேற்ற பின்னர் ரூ.400 திருப்பி வழங்கப்படும்.
பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேர்வில் பங்கேற்ற பின்னர் முழுக் கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதி
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 14.10.2026 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கடைசி நாளுக்காக காத்திருக்காமல் விண்ணப்பிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: RRB Apply அதிகாரப்பூர்வ இணையதளம்

