GNM, B.Sc. Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்டத்தில் அரசு சுகாதாரத் துறையின் கீழ் 90 தற்காலிக/ஒப்பந்த அடிப்படையிலான ஸ்டாஃப் நர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 25, 2026 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத் துறை, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை மற்றும் மதுரை மாநகராட்சியின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணியிடங்கள் உள்ளன.
- பணியின் பெயர்: Contractual / Temporary Staff Nurse
- காலியிடங்கள்: 90
- வயது வரம்பு: அதிகபட்சம் 50 வயது
- கல்வித் தகுதி: அரசு அல்லது இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் GNM அல்லது B.Sc Nursing
- பதிவு: தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் (Tamil Nadu Nurses and Midwives Council) செல்லுபடியாகும் பதிவு அவசியம்.
இந்தப் பணியிடங்கள் ஒப்பந்தம்/முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானவை என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 25.09.2026 மாலை 5 மணிக்குள் மாவட்ட நலவாழ்வு சங்கத்துக்கு கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
விஸ்வநாதபுரம், மதுரை – 625 014.
மேலும், விண்ணப்பப் படிவம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

