தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (18.09.2026) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 15,454 பள்ளிகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, விரிவாக்கத்திற்கான தொடக்க விழா செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்க உள்ளதாக அரசு சார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் தடையின்றி செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னோட

