சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/விளையாட்டு/குழந்தைகளுக்காக நடைபெற்ற ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான் – 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
விளையாட்டு

குழந்தைகளுக்காக நடைபெற்ற ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான் – 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

🕒 28 செப்., 2026, 10:23 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குழந்தைகளுக்காக நடைபெற்ற ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான் – 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
✨

AI Highlights

  • •இதயக் குறைபாடு மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக கோவையில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் நடைபெற்ற ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தானில் 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இதயக் குறைபாடுகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் 4-வது ஆண்டாக நடத்தப்பட்ட ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான் ஓட்டம் கோவையில் நடைபெற்றது.

பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளி மைதானம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையர் கோகுலகிருஷ்ணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, பிரீமியர் ஃபைன் லினன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சாந்தி ஸ்ரீனிவாசன் மற்றும் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் மற்றும் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஓட்டத்தில் கோவை மற்றும் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பிறவியிலேயே ஏற்பட்ட இதயக் குறைபாடுகளை எதிர்கொண்ட குழந்தைகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் ஓட்டத்தில் பங்கேற்றனர். இது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.

1 முதல் 10 கி.மீ. வரை ஓட்டம்

இந்த மாரத்தானில் 1 கி.மீ. மற்றும் 3 கி.மீ. தூரத்துக்கான மகிழ்வோட்டமும், 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. தூரத்துக்கான போட்டி ஓட்டமும் நடைபெற்றது. 2026-ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி செப்டம்பர் 27-ம் தேதி பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றதாக ஜி.கே.என்.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்ட தடகள சங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

குழந்தைகளின் இதயக் குறைபாடுகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திலும் இந்த மாரத்தான் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔