கோவை மதுக்கரை பகுதியில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 12-வது ஆண்டு விளையாட்டு விழா, பள்ளித் தாளாளர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விளையாட்டு விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்காக ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தடைகளைத் தாண்டி ஓடும் போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் மூலம் விழாவுக்கு 4 நாட்களுக்கு முன்பே போட்டிகள் தொடங்கப்பட்டன. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுப் போட்டிகளைத் தேர்வு செய்து, அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விளையாட்டு விழா பள்ளி முதல்வர் வனிதா திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சுமார் 1,500 பார்வையாளர்கள் நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்தனர்.
நான்கு அணிகளின் அணிவகுப்பு
விழாவின் தொடக்கமாக அமைச்சர் விக்னேஷ் தேசியக் கொடியையும், தாளாளர் வசந்த ராஜன் திருமூர்த்தி பள்ளிக் கொடியையும், முதல்வர் வனிதா விளையாட்டுக் கொடியையும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோரின் பெயர்களில் நான்கு வண்ண அணிகள் அணிவகுப்பு நடத்தினர். இதையடுத்து விளையாட்டு ஜோதி ஏற்றப்பட்டு போட்டிகள் தொடங்கின.
தொடர் ஓட்டப்பந்தயத்தில் வாஞ்சிநாதன் பெயரில் அமைந்த மஞ்சள் நிற அணி முதலிடத்தையும், வேலு நாச்சியார் பெயரில் அமைந்த அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது.
நான்கு அணிகளின் அணிவகுப்பில் தீரன் சின்னமலை பெயரில் அமைந்த நீல நிற அணி முதலிடத்தையும், வாஞ்சிநாதன் பெயரில் அமைந்த மஞ்சள் நிற அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் அமைச்சர் விக்னேஷ் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாணவர்களிடம் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் கு

