சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/விளையாட்டு/சி.பி.எஸ்.இ. கிளஸ்டர் நீச்சல் போட்டி: செட்டிநாடு வித்யாஷ்ரம் ஒட்டுமொத்த சாம்பியன்
விளையாட்டு

சி.பி.எஸ்.இ. கிளஸ்டர் நீச்சல் போட்டி: செட்டிநாடு வித்யாஷ்ரம் ஒட்டுமொத்த சாம்பியன்

🕒 19 செப்., 2026, 04:28 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சி.பி.எஸ்.இ. கிளஸ்டர் நீச்சல் போட்டி: செட்டிநாடு வித்யாஷ்ரம் ஒட்டுமொத்த சாம்பியன்

AI Highlights

  • பாளையங்கோட்டையில் நடைபெற்ற 2026–27 தென் மாநில சி.பி.எஸ்.இ. கிளஸ்டர் நீச்சல் போட்டியில் சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தென் மாநில அளவிலான 2026–27-ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. கிளஸ்டர் நீச்சல் போட்டிகள் பாளையங்கோட்டையில் நடைபெற்றன. இதில் சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ-மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று வெற்றிக்கோப்பையை கைப்பற்றினர்.

இப்போட்டிகள் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்காக 11, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் பல்வேறு வகையான நீச்சல் போட்டிகள் இடம்பெற்றன.

ஃப்ரீஸ்டைல் ஸ்பிரிண்ட் மற்றும் நீண்ட தூரப் பந்தயங்கள், பேக்ஸ்ட்ரோக், பிரெஸ்ட்ஸ்ட்ரோக், பட்டர்ஃபிளை உள்ளிட்ட தனிநபர் போட்டிகளுடன் ரிலே போட்டிகளும் நடைபெற்றன.

கடந்த 15-ம் தேதி தொடங்கிய போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தென் மாநில மண்டலத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து திரளான மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இப்போட்டியில் அதிக அளவில் வெற்றிகளைப் பதிவு செய்த சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ-மாணவிகள், பங்கேற்ற பள்ளிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றனர்.

வெற்றிபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் விஷ்ணு சக்கரவர்த்தி வெற்றிக்கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தார். போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔