சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/கோவில் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு – இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு
அரசியல்

கோவில் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு – இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு

🕒 26 செப்., 2026, 04:28 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
கோவில் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு – இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு
✨

AI Highlights

  • •நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சற்குண விநாயகர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகளைக் கண்டித்தும், எதிர்வரும் இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி பொதுமக்கள் சுவரொட்டிகள் ஒட்டி, ஊரில் கருப்பு கொடிகட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சற்குண விநாயகர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவில் விவகாரத்தில் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், வரவிருக்கும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டிகள் மூலம் அறிவித்துள்ளனர்.

கோவில் கையகப்படுத்த முயற்சி என குற்றச்சாட்டு

கோபாலசமுத்திரம் கிராமத்தில் சேனைத்தலைவர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீ சற்குண விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், இதற்கு ஆதரவாக ஊரில் சிலர் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அதில், “எங்கள் கோவில் எங்கள் உரிமை” என்ற முழக்கத்துடன், கோவிலை அரசு கையகப்படுத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அறநிலையத்துறை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

வீடுகள் மற்றும் வீதிகளில் கருப்பு கொடி

கோவில் விவகாரத்தில் அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகளைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் தங்களது வீடுகள் மற்றும் வீதிகளில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், அம்பாசமுத்திரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவுக்கு எதிராகவும் சுவரொட்டிகளில் கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

இடைத்தேர்தலை புறக்கணிப்போம் என அறிவிப்பு

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஸ்ரீ சற்குண விநாயகர் கோவில் விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கோவிலை அவசரமாக கையகப்படுத்த முயற்சி நடைபெறுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். அதிகாரிகளிடம் கேட்டபோது, “மேல் இடத்து அழுத்தம்” இருப்பதாக தெரிவிப்பதாகவும் கூறினர்.

தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள 48 கிராமங்களில் வசிக்கும் சேனைத்தலைவர் சமுதாய மக்கள் மற்றும் கோபாலசமுத்திரம் பொதுமக்கள் இணைந்து வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.

கோவில் விவகாரத்தை மையமாகக் கொண்டு பொதுமக்கள் சார்பில் இடைத்தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔