கோவை உக்கடம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்று வருகிறது.
கோவை 1-வது வீதி, உக்கடம் பகுதியில் உள்ள வாரி பள்ளி மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. VGM மருத்துவமனை மற்றும் சீமை மருத்துவத்துறை கிளினிக் இணைந்து முகாமை நடத்துகின்றன.
முகாமில் பொது மருத்துவம், குடல் நல மருத்துவம், இயன்முறை மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், இதய நலம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கல்லீரல் தொடர்பான பாதிப்புகள், Hepatitis B மற்றும் Hepatitis C உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் நேரடியாக பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

