சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/சென்னை–திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்: மத்திய அரசிடம் அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தல்
அரசியல்

சென்னை–திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்: மத்திய அரசிடம் அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தல்

🕒 18 ஆக., 2026, 12:07 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சென்னை–திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்: மத்திய அரசிடம் அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சென்னை–திருவனந்தபுரம் தொழில் வழித்தட (Industrial Corridor) திட்டத்தை விரைவாக பரிசீலித்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தொழில், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தியுள்ளார்.

இந்த கோரிக்கையை அவர் டெல்லியில் நடைபெற்ற பாவ்யா (BHAVYA) திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைத்தார். தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் இந்த தொழில் வழித்தடம் உருவானால், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சென்னை–திருவனந்தபுரம் தொழில் வழித்தடத்துடன் சேர்த்து தமிழகத்தில் முன்மொழியப்பட்டுள்ள 7 புதிய தொழிற்பூங்காக்களையும் மத்திய அரசு பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த திட்டங்கள் தொழில் முதலீட்டை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழகத்தை தென்னிந்தியாவின் முன்னணி உற்பத்தி மற்றும் முதலீட்டு மையமாக மாற்றும் நோக்கில், மத்திய–மாநில அரசுகள் இணைந்து உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தையும் கீர்த்தனா வலியுறுத்தினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔