சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/அப்பாவு சமூக வலைதள பதிவு: “டப்பிங் மாடல் ஆட்சி” என தமிழக அரசுக்கு விமர்சனம்
அரசியல்

அப்பாவு சமூக வலைதள பதிவு: “டப்பிங் மாடல் ஆட்சி” என தமிழக அரசுக்கு விமர்சனம்

The News Outlook
🕒 13 ஆக., 2026, 06:27 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அப்பாவு சமூக வலைதள பதிவு: “டப்பிங் மாடல் ஆட்சி” என தமிழக அரசுக்கு விமர்சனம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தனது சமூக வலைதளப் பதிவில், நடந்து முடிந்த சட்டப்பேரவை நிகழ்வுகளை விமர்சித்து பதிவிட்டுள்ளார் நடந்து முடிந்த சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்த்த எனக்கு நினைவுக்கு வருகிறது #கலைஞரின் வரிகள்: சிந்திக்க இயலாதவன் அறிவிலி, சிந்திக்க விரும்பாதவன் சோம்பேறி, சிந்திக்க அஞ்சுபவன் கோழை, சிந்தித்து செயல்படுபவனே பகுத்தறிவாளன். கடந்த ஐந்தாண்டு காலம் சிந்தித்து செயல்பட்டு, தமிழர்களின் உரிமையையும் தமிழகத்தையும் ஒன்றிய அரசின் எதிர்ப்பையும் தாண்டி பாதுகாத்து, எல்லாத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்குக் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின். கடந்த 34 ஆண்டுகள் பெரும்பாலும் பிறமொழிப் படங்களை டப்பிங் செய்து நடிகராக இருந்தது போல், ஆட்சியிலும் முன்னாள் முதல்வர் #முகஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்களான காவிரி, மேகதாது, நீட், தொகுதி மறு வரையறை, FCRA உள்ளிட்ட தீர்மானங்களை டப்பிங் செய்து, தான் சிந்தித்து செயல்படுத்தியது போல் "டப்பிங் மாடல் ஆட்சி" செய்து வரும் நீங்கள் "கோழை" என்பதை தமிழ்நாடே சிரிக்கிறது CM sir ? நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் கலைஞர் போல் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு "சின்ன கலைஞர்" என்று தமிழ்நாட்டு மக்களே பாராட்டி வருகின்றனர். தொகுதி மறு வரையறை தீர்மானத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, அடுத்த பிரதமர் தமிழ்நாட்டில் இருந்து தான் வருவார் என்று சொன்னதும் "விஜய்" கள்ளச் சிரிப்புடன் சட்டமன்றத்தில் அமர்ந்து ரசித்தார். அப்போது த.வெ.க உறுப்பினர்களும், காங்கிரஸ் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றது காங்கிரசுக்கும், ராகுல் காந்திக்கும் செய்யும் துரோகம் இல்லையா CM sir ?

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔