விருதுநகர் மாவட்டம் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் சார் ஆட்சியர் முகம்மது இர்பான் தலைமையில் நடைபெற்றது. குறைதீர் கூட்டத்தில் சிவகாசி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய 4 வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு குறைகளையும், கோரிக்கைகளையும் சார் ஆட்சியரிடம் முன் வைத்தனர். மேலும் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்காக நடத்தப்படும் இந்த குறைதீர் கூட்டத்தில் வருவாய்த்துறை மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் முறையாக பங்கேற்பதில்லை என குற்றம் சாட்டிய விவசாயிகள் இதனால் தாங்கள் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் மீண்டும் முன் வைக்க வேண்டிய நிலை உள்ளதால் குறைதீர் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டுமென சார் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் அதிருப்தி.
🕒 18 ஆக., 2026, 09:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
