சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/இருசக்கர வாகன திருட்டு வழக்கு: 19 வாகனங்கள் மீட்பு – ஒருவர் கைது
செய்திகள்

இருசக்கர வாகன திருட்டு வழக்கு: 19 வாகனங்கள் மீட்பு – ஒருவர் கைது

🕒 2 அக்., 2026, 11:19 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
இருசக்கர வாகன திருட்டு வழக்கு: 19 வாகனங்கள் மீட்பு – ஒருவர் கைது
✨

AI Highlights

  • •திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது – காவல்துறையினரின் தொடர் நடவடிக்கையால் திருடப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் மீட்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாங்குநேரி உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இதுவரை 19 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், நாங்குநேரி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் கண்ணன் மேற்பார்வையில், நாங்குநேரி உட்கோட்ட போலீசார் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நாங்குநேரியைச் சேர்ந்த நல்லகண்ணு (28) மற்றும் சிறார் ஒருவர் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 9 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மூன்றடைப்பு காவல் நிலையத்தில் பதிவான திருட்டு வழக்கு தொடர்பாக மறுகால்குறிச்சியைச் சேர்ந்த கொம்பையா (42) என்பவரை போலீசார் அக்டோபர் 2-ம் தேதி கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் 10 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மீட்கப்பட்ட வாகனங்கள் தொடர்பாக தச்சநல்லூர், பாளையங்கோட்டை, களக்காடு, பெருமாள்புரம், வள்ளியூர், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி டவுன் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கொம்பையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த முத்து என்ற சப்பாத்தி முத்து 5 இருசக்கர வாகனங்களையும், செல்லத்துரை 6 வாகனங்களையும், அருண் 2 வாகனங்களையும் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு வள்ளியூரைச் சேர்ந்த சையது முகைதீன் என்பவரின் உதவியுடன் போலி ஆர்.சி. புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் மூலம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்து, அவர்களிடம் இருப்பதாகக் கூறப்படும் மீதமுள்ள திருடப்பட்ட வாகனங்களை மீட்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நாங்குநேரி உட்கோட்ட காவல்துறையின் தொடர் நடவடிக்கையின் மூலம் இதுவரை

மொத்தம் 19 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔