சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/செப்டிக் டேங்கில் சிக்கிய 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு – போலீசார் விசாரணை
செய்திகள்

செப்டிக் டேங்கில் சிக்கிய 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு – போலீசார் விசாரணை

🕒 2 அக்., 2026, 11:15 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செப்டிக் டேங்கில் சிக்கிய 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு – போலீசார் விசாரணை
✨

AI Highlights

  • •அரியலூர் - செந்துறையில் செப்டிக் டேங்கில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு – போலீசார் விசாரணை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்டம் செந்துறையில் கட்டுமானப் பணியின்போது செப்டிக் டேங்கிற்குள் இறங்கிய 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே சுப்பிரமணியன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் கட்டுமானப் பணிகளின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்கில் கான்கிரீட் பணிக்குப் பயன்படுத்தப்பட்ட பலகைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணிக்காக செப்டிக் டேங்கிற்குள் இறங்கிய 3 தொழிலாளர்களும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆபத்தான நிலையில் இருந்த மூவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் மூவரும் செந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன. செப்டிக் டேங்கிற்குள் ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கான காரணம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஒரே நேரத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔