நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வாய்மேடு சின்னதேவன்காடு, பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (28). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வாய்மேடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயபாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாகப்பட்டினத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ராஜ்குமார் தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட ஜெயபாலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.









