திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டை செல்லும் பிரதான சாலையில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக, சாலை ஓரத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீருடன் சேர்ந்த மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கக்கூடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், எதிர்காலத்தில் மழைக்காலங்களில் இதுபோன்று சாக்கடை நீர் சாலையில் தேங்காதவாறு நிரந்தர வடிகால் கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.









