உலக இருதய தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் சிறுவாச்சூரில் செயல்பட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் இருதய நலன் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரோவர் வளைவு பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணி, திருச்சி சாலை வழியாக வெங்கடேசபுரம், பாலக்கரை பகுதிகளை கடந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இருதய நலன் குறித்து விழிப்புணர்வு
பேரணியில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இருதயத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர். மேலும், இருதய நலனை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் இருதய ஆரோக்கியம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

