சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/61 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் – விடுபட்ட சான்றிதழ்களை அக்டோபர் 3க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
செய்திகள்

61 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் – விடுபட்ட சான்றிதழ்களை அக்டோபர் 3க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

🕒 1 அக்., 2026, 10:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
61 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் – விடுபட்ட சான்றிதழ்களை அக்டோபர் 3க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
✨

AI Highlights

  • •அரியலூர் மாவட்டத்தில் NHM திட்டத்தின் கீழ் 61 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விடுபட்ட சான்றிதழ்களை அக்டோபர் 3 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள 61 ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை மாவட்ட நலச்சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள இந்த பணியிடங்களுக்கு, மாதம் ரூ.21,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 25-ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்பட்டன.

விடுபட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்

பெறப்பட்ட விண்ணப்பங்களில் சிலவற்றில் சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், செல்லுபடியாகும் தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் விடுபட்டிருந்தால், அவற்றை அக்டோபர் 3-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சான்றிதழ்களை கீழ்க்கண்ட முகவரியில் சமர்ப்பிக்கலாம்:

மாவட்ட சுகாதார அலுவலகம்,

ஜெயங்கொண்டம் ரோடு,

பல்துறை வளாகம்,

அரியலூர்.

சான்றிதழ்கள் சமர்ப்பிக்காவிட்டால் விண்ணப்பம் நிராகரிப்பு

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களின் விவரங்களை அரியலூர் மாவட்ட நிர்வாக இணையதளம் வாயிலாகவும், 7550372009 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிந்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔