சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 29 குவாரிகளில் விதிமீறல்
செய்திகள்

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 29 குவாரிகளில் விதிமீறல்

🕒 18 ஆக., 2026, 08:38 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 29 குவாரிகளில் விதிமீறல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருகிறது செயல்படும் பெரும்பாலான குவாரிகளில் அரசு விதிகளை பின்பற்றாமல் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு அறப்போர் இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இதில் 158 பேர் நேரடியாகவும் 58 பேர் சமூக வலைதளம் மூலமாகவும் குவாரிகள் விதிமீறல் குறித்து புகார் அளித்திருந்தனர் இதனை விசாரிக்க அறப்போர் இயக்கத்தினர் சுயாதீன நிபுணர் குழு ஒன்றை அமைத்தனர் அதில் சட்ட வல்லுநர்கள் கட்டிடக்கலை நிபுணர்கள் பல்லுயிர் நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர் இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் 25 குவாரிகளிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு குவாரிகளிலும் விருதுநகர் மாவட்டத்தில் இரண்டிலும் ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வு நடத்திய அனைத்து குவாரிகளும் விதிமீறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக திருநெல்வேலி பத்திரிக்கையாளர் மன்றத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய பொதுச் செயலாளருமான வழக்கறிஞர் சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் திருநெல்வேலி தென்காசி விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு செய்த அனைத்து குவாரிகளிலும் விதிமீறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பாக சுரங்க திட்ட விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை பல இடங்களில் தனியார் சாலைகள் கிராமத்திற்கு செல்லும் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குவாரி கழிவுகள் பல இடங்களில் கொட்டப்பட்டுள்ளது கற்களை வெட்டும் முறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை விவசாயம் நிலத்தடி நீர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது விவசாய நிலங்களில் குவாரிகளின் தூசிகள் படிந்துள்ளது பல குவாரிகளில் விதி மீறல்கள் அப்பட்டமாக உள்ளது புதிய குவாரிகள் அமைப்பது உள்ளிட்டவைகளுக்கு மக்களின் கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை தொடர்பில்லாத நபர்களை அழைத்து வந்து கருத்து கேட்டு கூட்டங்களில் பங்கேற்க வைக்கின்றனர் மேலும் அரசிற்கு பல்வேறு பரிந்துரைகளையும் அவர்கள் வைத்துள்ளனர் குறிப்பாக சுரங்க திட்ட விதிமுறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் இரவு நேரத்தில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கக் கூடாது சட்டவிரோத நடவடிக்கைகளை ஈடுபட்டு வரும் குவாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் கனிம வளங்கள் சட்ட விரோதமாக கடத்துவதை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் புதிய குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கும் முன்னர் அரசு துறையின் அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் வருவாய்த்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் நேரில் செல்லாமல் அனுமதி வழங்கும் நடவடிக்கை தொடர்கிறது தமிழக கனிமவளத்துறை அமைச்சர் பிரபு திருநெல்வேலி மாவட்ட குவாரிகளை தற்போது வரை ஆய்வு செய்யவில்லை அவர் ஆய்வு மேற்கொண்டு சட்ட விதி மீறல்கள் உள்ள குவாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட குவாரிகள் அதனை முழுமையாக செலுத்தவில்லை அதனை வசூலிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர் சட்டவிரோத குவாரிகள் விதி மீறல்களை தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை விரைவாக எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔