சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/திருச்சியில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
செய்திகள்

திருச்சியில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

🕒 29 செப்., 2026, 07:10 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
திருச்சியில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
✨

AI Highlights

  • •திருச்சியில் டிசைன் ஓவியப்பள்ளி மற்றும் போத்தீஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

டிசைன் ஓவியப்பள்ளி மற்றும் போத்தீஸ் நிறுவனம் ஆதரவுடன் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா திருச்சியில் நடைபெற்றது.

டிசைன் ஓவியப்பள்ளியின் 16-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. போட்டி வண்ணம் தீட்டுதல், பொம்மை உலகம், மாயாஜாலக் காடுகள், மனிதனும் எந்திர உலகமும் என 4 பிரிவுகளில் நடைபெற்றது. மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழா

திருச்சியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் டிசைன் ஓவியப்பள்ளி முதல்வர் நஸ்ரத் பேகம் தொடக்க உரையாற்றினார். தாளாளர் மதன், போத்தீஸ் சண்முகவேல், ஓவியர் தனபால், மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர், தமிழ்ச்சுடர் தாமல் கோ. சரவணன், பாவலர் அறிவுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கினர்.

வண்ணம் தீட்டும் பிரிவு

  • முதல் பரிசு – ரூ.5,000: ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா யு.கே.ஜி. மாணவி பி. லக்ஷன்யா
  • இரண்டாம் பரிசு – ரூ.3,000: ராஜாஜி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி யு.கே.ஜி. மாணவி ம. யாழினி
  • மூன்றாம் பரிசு – ரூ.2,000: ஸ்ரீபாலா வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி எல்.கே.ஜி. மாணவி அ. அமிழினியா

பொம்மை உலகம் பிரிவு

  • முதல் பரிசு – ரூ.5,000: ஆர்.எஸ்.கே. மேல்நிலைப் பள்ளி மாணவி பியோனா ரூஃபி
  • இரண்டாம் பரிசு – ரூ.3,000: ஸ்ரீ குலபதி பாலையா தொடக்கப்பள்ளி மாணவர் எம். வர்ஷித் கதிர்வேல்
  • மூன்றாம் பரிசு – ரூ.2,000: ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவி வி. வசுந்தரா

மாயாஜாலக் காடுகள் பிரிவு

  • முதல் பரிசு – ரூ.5,000: பெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே. கிளாடித் கிறிஸ்டில்டா
  • இரண்டாம் பரிசு – ரூ.3,000: வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. மயூரி உஷா
  • மூன்றாம் பரிசு – ரூ.2,000: செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம். ராஜஸ்ரீ

மனிதனும் எந்திர உலகமும்

  • முதல் பரிசு – ரூ.5,000: ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.ஏ. மகிழன்
  • இரண்டாம் பரிசு – ரூ.3,000: பெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் பி. மோனிஷ் ராகவ்
  • மூன்றாம் பரிசு – ரூ.2,000: செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருச்சி மாணவர் எஸ்.வி. ஹேமச்சந்திரன்

மாணவர்களின் ஓவியத் திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔