சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/சிவாஜி கணேசன் 99-வது பிறந்தநாள் பேச்சுப்போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
செய்திகள்

சிவாஜி கணேசன் 99-வது பிறந்தநாள் பேச்சுப்போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

🕒 28 செப்., 2026, 04:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சிவாஜி கணேசன் 99-வது பிறந்தநாள் பேச்சுப்போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
✨

AI Highlights

  • •சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி. ராபர்ட் புரூஸ் பரிசு வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நெல்லையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலம் முழுவதும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

மாநகர் மாவட்ட தலைவர் ராமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது பேச்சுத் திறனை வெளிப்படுத்தினர்.

மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சங்கர பாண்டியன், கொடிக்குறிச்சி முத்தையா, ஜாகிர் உசேன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔