சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சைவ மீலாது நபி கந்தூரி விழா – 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கல்
செய்திகள்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சைவ மீலாது நபி கந்தூரி விழா – 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கல்

🕒 28 செப்., 2026, 06:13 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சைவ மீலாது நபி கந்தூரி விழா – 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கல்
✨

AI Highlights

  • •திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியில் நண்பர்கள் குழு சார்பில் 10-வது ஆண்டு மீலாது நபி கந்தூரி விழா நடைபெற்றது. புரட்டாசியை முன்னிட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சைவ உணவு வழங்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி ஜின்னா நகர் நண்பர்கள் குழு சார்பில், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 10-வது ஆண்டு மீலாது நபி கந்தூரி விழா நடைபெற்றது.

மீலாது நபி விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், மத வேறுபாடுகளை கடந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

புரட்டாசியை முன்னிட்டு சைவ உணவு

பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் இந்துக்கள் அதிகளவில் வசித்து வருவதுடன், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பல இந்து மக்கள் அசைவ உணவைத் தவிர்த்து விரதம் மற்றும் சைவ உணவு முறையை கடைப்பிடித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மீலாது நபி கந்தூரி விழாவில் அனைவரும் ஒன்றாக உணவருந்தும் வகையில் முழுமையாக சைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முஸ்லிம் சகோதரர்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரும் கலந்து கொண்டு உணவைப் பெற்றுச் சென்றனர். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்ற இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

“மதங்கள் வேறாக இருந்தாலும் மனிதநேயம் ஒன்றே”

“மதங்கள் வேறாக இருந்தாலும் மனிதநேயம் ஒன்றே; உணவு பகிர்வோம், அன்பை வளர்ப்போம், ஒற்றுமையை நிலைநாட்டுவோம்” என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கந்தூரி விழா நடைபெற்றது.

நண்பர்கள் குழு சார்பில் தொடர்ந்து 10-வது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சி, பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் நிலவும் மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

விழாவில் பங்கே

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔