சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற புஷ்ப யாகம்!
செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற புஷ்ப யாகம்!

🕒 18 ஆக., 2026, 01:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற புஷ்ப யாகம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப் பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான ஸ்ரீ ஆண்டாள் ஆடிப் பூரத் தேரோட்டத்திருவிழா கடந்த 14ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தேர்த்திருவிழா வின் நிறைவு நாளான இன்று இரவு புஷ்ப யாகம் நடைபெற்றது. புஷ்பயாகம் நடைபெறுவதையொட்டி ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் இரவு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் சுவாமிகளுக்கு மல்லிகைப் பூ, ரோஜாப் பூ, சம்பங்கி பூ, விரிச்சிப்பூ, என பலவித கலர் ரோஜாக்கள் மரிக்கொழுந்து மற்றும் துளசி போன்ற மலர்களால் "ஓம் நமோ நாராயணாய" " ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரங்களை சொல்லி பட்டர்கள் புஷ்ப யாகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீஆண்டாள்-ரெங்கமன்னாரை வழிபட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔