சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/சுடுகாட்டுப் பாதை அமைக்கக் கோரி போராட்டம்
செய்திகள்

சுடுகாட்டுப் பாதை அமைக்கக் கோரி போராட்டம்

🕒 30 செப்., 2026, 11:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சுடுகாட்டுப் பாதை அமைக்கக் கோரி போராட்டம்
✨

AI Highlights

  • •தென்காசி: அடைச்சாணி ஊராட்சியில் சுடுகாட்டுப் பாதை அமைத்துத் தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அடைச்சாணி ஊராட்சியில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை சீரமைத்து, முறையான சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைச்சாணி ஊராட்சியில் குளத்துக்கரையை ஒட்டி சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை அமைந்துள்ளது. இந்தப் பாதை பல ஆண்டுகளாக முறையாக சீரமைக்கப்படாமல் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மழைக்காலத்தில் சிரமம்

மழைக்காலங்களில் சுடுகாட்டுப் பாதை சேறும் சகதியுமாக மாறுவதால், இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். சில நேரங்களில் தண்ணீரில் இறங்கி உடல்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ரூ.55 லட்சத்தில் சாலை, சிறுபாலம் அமைக்க உறுதி

இதுகுறித்து தகவலறிந்து வந்த கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர் பேட்டர்சன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சுடுகாட்டுப் பாதையில் உள்ள முட்செடிகள் உடனடியாக அகற்றப்படும் என்றும், சிறுபாலம் மற்றும் சாலை அமைக்க ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கூடுதல் நிதி தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

எனினும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் தொடங்கப்படாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔