சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/நெல்லை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிக்கு கத்திக்குத்து – 2 வாலிபர்களிடம் விசாரணை
செய்திகள்

நெல்லை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிக்கு கத்திக்குத்து – 2 வாலிபர்களிடம் விசாரணை

🕒 28 செப்., 2026, 05:32 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
நெல்லை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிக்கு கத்திக்குத்து – 2 வாலிபர்களிடம் விசாரணை
✨

AI Highlights

  • •நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் சேலம் ரயிலுக்காக காத்திருந்த நபருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே சேலம் செல்வதற்காக ரயிலுக்காக காத்திருந்த பயணியை கத்தியால் குத்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கருங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சேலம் செல்வதற்காக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இரவு 9 மணிக்கு ரயில் வர இருந்த நிலையில், முத்துசாமியும் அவரது உறவினர் ஒருவரும் குடும்பத்தினரை ரயில் நிலையத்தில் அமர வைத்துவிட்டு அனைவருக்கும் உணவு வாங்குவதற்காக வெளியே வந்துள்ளனர்.

அப்போது ரயில் நிலையம் முன்பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகே சென்றபோது, அங்கு இருந்ததாக கூறப்படும் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் வீரபத்திரன் ஆகிய இருவருக்கும் முத்துசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து இருவரும் முத்துசாமியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய இருவரையும் பிடித்த பொதுமக்கள்

இதனிடையே தப்பி ஓடிய இருவரையும் அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது ராமகிருஷ்ணன் தான் வைத்திருந்த கத்தியால் தனது கையை காயப்படுத்திக் கொண்டதாகவும், தன்னை முத்துசாமி தாக்கியதாகவும் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ராமகிருஷ்ணனும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு ரயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துசாமியை கத்தியால் குத்தியதற்கான காரணம் என்ன, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறுக்கான பின்னணி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இருவரும் ரயில் நிலையப் பகுதியில் அடிக்கடி சுற்றித் திரிந்தார்களா, சம்பவத்தின்போது போதையில் இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ரயிலுக்காக காத்திருந்த பயணிக்கு ரயில் நிலையம் அருகே கத்திக்குத்து விழுந்த சம்பவம் நெல்லை சந்திப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔