நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த இல்லத்தில், முரசொலி மாறனின் 23-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்வின் ஒரு பகுதியாக, நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வடவூர் ராஜேந்திரன், கோவிந்தராஜன், இல.மேகநாதன் மற்றும் ஒன்றிய திமுக செயலாளர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், மகா.குமார், மலர் வண்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.









