Settings

முகப்பு/செய்திகள்/ஒரே ஸ்கூட்டியில் சென்ற மாணவர்கள் மீது பாய்ந்த பிஎம்டபுள்யூ கார் - பதைபதைக்க வைக்கும் விபத்து!
செய்திகள்

ஒரே ஸ்கூட்டியில் சென்ற மாணவர்கள் மீது பாய்ந்த பிஎம்டபுள்யூ கார் - பதைபதைக்க வைக்கும் விபத்து!

🕒 23 நவ., 2026, 01:24 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஒரே ஸ்கூட்டியில் சென்ற மாணவர்கள் மீது பாய்ந்த பிஎம்டபுள்யூ கார் - பதைபதைக்க வைக்கும் விபத்து! - படம் 1 - The News Outlook
📸1 / 7
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (7)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கரூர் மாவட்டம் பொய்கைபுத்தூரில் ஸ்கூட்டி மீது பிஎம்டபுள்யூ சொகுசு கார் மோதிய விபத்தில் 2 அரசு பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர் மாவட்டம் பொய்கைபுத்தூர் பகுதியில் ஸ்கூட்டி மீது பிஎம்டபுள்யூ சொகுசு கார் மோதிய விபத்தில் இரண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் இரு மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள மணவாசி பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் (16), மணவாசி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் (16). இவர்கள் இருவரும் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில், பள்ளி முடிந்ததும் மேட்டு மகாதானபுரத்திற்குச் செல்வதற்காக பிரதாப், மாதேஷ், ஸ்ரீதர் மற்றும் விகாஸ் ஆகிய நான்கு மாணவர்களும் ஒரே ஸ்கூட்டியில் சென்றுள்ளனர்.

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கம்மநல்லூர் ஊராட்சி பொய்கைபுத்தூர் பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, எதிரே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்த சொகுசு பிஎம்டபுள்யூ கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற ஸ்கூட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஸ்கூட்டியில் பயணம் செய்த மாதேஷ் மற்றும் பிரதாப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த மற்ற இரண்டு மாணவர்களும் மீட்கப்பட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே, விபத்தின் தாக்கத்தால் தலைகுப்புற கவிழ்ந்த அந்தச் சொகுசு காரில் பயணித்த நான்கு பேரும் காயமடைந்து, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாப்பேட்டை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இரண்டு மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மறைந்த திமுக நிர்வாகி பி.கே. பச்சையப்பன் உருவப்படம் திறப்பு: செஞ்சி மஸ்தான் மலரஞ்சலி!செய்திகள்

மறைந்த திமுக நிர்வாகி பி.கே. பச்சையப்பன் உருவப்படம் திறப்பு: செஞ்சி மஸ்தான் மலரஞ்சலி!

Arivazhagan🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மின் வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மின் வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

Sugumaran🕒 நவ. 23
தீபத் திருவிழா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைவரிசை: திருப்பத்தூரில் அதிரடி கைது!செய்திகள்

தீபத் திருவிழா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைவரிசை: திருப்பத்தூரில் அதிரடி கைது!

ARAVINDHAN🕒 நவ. 23
நவம்பர் 27-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!செய்திகள்

நவம்பர் 27-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

MSD🕒 நவ. 23
திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதுஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Srinivasan🕒 நவ. 24
திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!ஆன்மீகம்

திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!

Vijay🕒 நவ. 24
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!தொழில்நுட்பம்

பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!

Srinivasan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔