விருதுநகர் அருகேயுள்ள பட்டம்புதூர் பகுதியில், விருதுநகர் பட்டேல் சாலை பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்குச் சொந்தமான 'கண்மணி தீப்பெட்டி தொழிற்சாலை' இயங்கி வருகிறது. இன்று காலை, இந்த ஆலையின் தீப்பெட்டிகள் அடுக்கி வைத்திருந்த பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இத்தீ விபத்தில் ஆலையில் உள்ள தகர செட்டில் தயார் செய்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து தீப்பெட்டிகளும் முழுமையாக எரிந்து சாம்பலாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள்
தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்
🕒 18 ஆக., 2026, 04:29 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
