சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ – தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
செய்திகள்

சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ – தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

🕒 28 செப்., 2026, 04:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ – தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில், வனத்துறையினர், தீத்தடுப்பு பிரிவினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்–மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் புலிகள் சரணாலய எல்லைக்குட்பட்ட சதுரகிரி 6-ம் நம்பர் பீட் பகுதியில் உள்ள மொட்டை பெருமாள் கோவில் அருகே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் காய்ந்த செடிகள் மற்றும் முட்புதர்கள் அதிகளவில் இருப்பதால், தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கு வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வனத்துறையினர், தீத்தடுப்பு பிரிவினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் இணைந்து, மலைவாழ் மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை தரப்பில் கூறுகையில், அனுமதியை மீறி பெருமாள் கோவில் பகுதிக்கு சென்ற சில பக்தர்கள் அங்கு தீபம் ஏற்றியபோது, அருகில் இருந்த காய்ந்த முட்புதரில் தீப்பற்றி காட்டுத்தீ ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதியில் புலிகள், யானைகள், மான்கள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔