Settings

முகப்பு/செய்திகள்/கிணற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு - பெரும் சோகம்
செய்திகள்

கிணற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு - பெரும் சோகம்

🕒 18 நவ., 2026, 02:01 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கிணற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு - பெரும் சோகம் - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கரூர் அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர்: கரூர் மாவட்டம், நெரூர் அருகே உள்ள சின்னகாளிபாளையத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கிணற்றில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கமேடு கொங்குநகரைச் சேர்ந்த ராமசாமி (63), அவரது மனைவி ஜானகி (60), இவர்களது மகள் சுகுணா (35) மற்றும் சுகுணாவின் குழந்தைகளான சிவானி (10), அதிரன் (4) ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். சுகுணாவுக்கும், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 15-ம் தேதி முதல் சுகுணா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று மாலை, சின்னகாளிபாளையத்தில் உள்ள அவர்களது தோட்டத்துக் கிணற்றில் ஐந்து பேரின் உடல்களும் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக வாங்கல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
காவல்துறையினர் மீது திடுக்கிடும் புகார்! தேனி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் கண்ணீர்!செய்திகள்

காவல்துறையினர் மீது திடுக்கிடும் புகார்! தேனி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் கண்ணீர்!

Rajesh Priyan🕒 நவ. 22
பவானிசாகரில் அதிரடி ரெய்டு: போதை மாத்திரைகள், கஞ்சாவுடன் 3 பேர் கைது!செய்திகள்

பவானிசாகரில் அதிரடி ரெய்டு: போதை மாத்திரைகள், கஞ்சாவுடன் 3 பேர் கைது!

Dinesh🕒 நவ. 22
உறைபனிப் பொழிவு: 8 டிகிரிக்கும் கீழ் சரிந்த வெப்பநிலை!செய்திகள்

உறைபனிப் பொழிவு: 8 டிகிரிக்கும் கீழ் சரிந்த வெப்பநிலை!

VASANTHA🕒 நவ. 22
போக்சோ வழக்கில் சிக்கிய அக்னிபாத் பயிற்சி வீரர்: தொழில்நுட்ப உதவியுடன் கைது செய்த போலீஸ்!செய்திகள்

போக்சோ வழக்கில் சிக்கிய அக்னிபாத் பயிற்சி வீரர்: தொழில்நுட்ப உதவியுடன் கைது செய்த போலீஸ்!

VASANTHA🕒 நவ. 22
போதைப்பொருளுக்கு எதிராக கைகோர்த்த என்.சி.சி மாணவர்கள்! வாணியம்பாடியில் அசத்தல் பேரணி!செய்திகள்

போதைப்பொருளுக்கு எதிராக கைகோர்த்த என்.சி.சி மாணவர்கள்! வாணியம்பாடியில் அசத்தல் பேரணி!

Srinivasan🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
இருக்கன்குடி கோயிலில் 1 கி.மீ நீள வரிசை: பக்தர்களின் நேர்த்திக்கடனை பாதிக்கும் புதிய நடைமுறை!நகரங்கள்

இருக்கன்குடி கோயிலில் 1 கி.மீ நீள வரிசை: பக்தர்களின் நேர்த்திக்கடனை பாதிக்கும் புதிய நடைமுறை!

Ramkumarsamy🕒 நவ. 22
பக்தி பரவசத்தில் கிராம மக்கள்: பாலமேடு அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகம்ஆன்மீகம்

பக்தி பரவசத்தில் கிராம மக்கள்: பாலமேடு அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகம்

Vijay🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔