சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பட்டாசு ஆலையில் வெடி விபத்து – தொழிலாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – தொழிலாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

🕒 1 அக்., 2026, 04:26 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பட்டாசு ஆலையில் வெடி விபத்து – தொழிலாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
✨

AI Highlights

  • •சிவகாசி அருகே நதிக்குடியில் உள்ள பட்டாசு ஆலையில் இயந்திரம் வெடித்ததில் தயாரிப்பு அறை சேதமடைந்தது. தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சிவகாசி அருகே நதிக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிப்பு அறை சேதமடைந்தது. தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு உள்ளிட்ட பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நதிக்குடி கிராமத்தில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான காரனேசன் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பட்டாசு தயாரிப்புக்கான ரசாயன மூலப்பொருட்களை இயந்திரம் மூலம் கலவை செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பட்டாசு தயாரிப்பு அறை சேதம்

இந்த வெடி விபத்தில் பட்டாசு தயாரிப்பு அறை சேதமடைந்தது. சம்பவத்தின்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாரனேரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இயந்திரத்தில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔