நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சாட்டுப்பத்து ஊராட்சியில், கடந்த சில வாரங்களாக திறக்கப்படாமல் இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் வலியுறுத்தலுக்குப் பின்னர் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. இதையடுத்து, அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் காத்திருந்த விவசாயிகள், தற்போது சாட்டுப்பத்து பகுதியில் செயல்பட்டு வரும் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், அறுவடை செய்த நெல்லை உடனடியாக விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்திகள்
சாட்டுப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
🕒 30 செப்., 2026, 07:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •சாட்டுப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
