கோவை VLB ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அலையன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சேரன், GEM Cancer Centre மற்றும் GEM Hospital ஆகியவை இணைந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. “Together Against Cancer – Awareness for a Healthier Tomorrow” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புற்றுநோய் தடுப்பு, ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவிகளுடன் மருத்துவர் கலந்துரையாடல்
நிகழ்ச்சியில் GEM Cancer Centre-ன் மார்பக இமேஜிங் துறை ஆலோசகர் டாக்டர் பிரேமா சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் மாணவிகளுடன் கலந்துரையாடி, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.மேலும், உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் கவனிப்பது, முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் டாக்டர் பி. மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் என். குமார் தலைமை உரையாற்றினார். எஸ். பிரபாகரன் சிறப்புரையாற்றியதுடன், கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றார்.
200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டனர்.
“புற்றுநோயை எதிர்கொள்ள விழிப்புணர்வே முதல் படி” என்ற நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மாணவிகள் மத்தியில் புற்றுநோய் குறித்த புரிதலையும் சுகாதார விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

