திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களைத் தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்துடன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற நவம்பர் 27, 2026 அன்று நடைபெற உள்ளது.
இம்முகாமில் உற்பத்தித் துறை, சேவைத் துறை மற்றும் விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியான நபர்களைத் தங்களது நிறுவனங்களுக்குத் தேர்வு செய்ய உள்ளன. மேலும், மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்துகொண்டு, இலவச திறன் பயிற்சிக்கான ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளன.
யார் பங்கேற்கலாம்?
10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் மற்றும் 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்:
நேர்காணலில் பங்கேற்க விரும்பும் வேலைநாடுநர்கள் சுயவிவரக் குறிப்பு (Bio-data), அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் பங்கேற்கலாம்.
இடம் மற்றும் நேரம்:
நவம்பர் 27 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, திருச்சி கண்டோன்மென்ட், பாரதிதாசன் சாலையில் (மேற்கு தாலுக்கா அலுவலகத்தின் பின்புறம்) அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55902 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.









